பாஜக கூட்டணி கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளாதது ஏன்..? திமுகவுடன் புதிய கூட்டணியா.? பிரேமலதா விளக்கம்

By Ajmal Khan  |  First Published Jul 24, 2023, 12:07 PM IST

திமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்தி தவறு என தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த்,  மறைமுகமாக கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் தே.மு.தி.க.வுக்கு இல்லையெனவும் கூறினார்.


தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மணிப்பூர் கலவரத்தில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தவர்களை கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும். தக்காளி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Latest Videos

undefined

பாஜக கூட்டணியில் தேமுதிக இல்லை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். தற்போது வரை தே மு தி க எந்த கூட்டணியிலும் இல்லை, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உறுதியான , நல்ல முடிவை எடுக்கும் .கட்சியின் வளர்ச்சி , எதிர்காலம் கருதி  நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளாதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுப்கப்படவில்லை என அண்மையில் செய்தி பார்த்தேன். இந்த நிமிடம்வரை நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை , எனவே தான் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. 

திமுகவுடன் கூட்டணிக்கு தூதா.?

பாஜகவிற்கு எதிராக அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்குள் பல முரண்கள் உள்ளது. திமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்தி தவறு. மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தே.மு.தி.க.வுக்கு இல்லையெனவும் கூறினார். மேலும் தே மு தி க தலைமையில் புதிதாக கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லையென தெரிவாத்தார். ரெய்டுகள் எல்லாம் ஒவ்வ்வொரு ஆட்சியிலும் எதிர்கட்சிகள் மீது நடத்துவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த ரெய்டுகள் மூலம் கைப்பற்றப்பட்டது என்ன என்பது குறித்து இதுவரை வெளியில் சொல்வது இல்லை.

அமைச்சர்கள் வீட்டில் சோதனை

பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அவர் பதிலளிக்க வேண்டும். செந்தில்பாலாஜிக்கு ஏன் அரசு இவ்வளவு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது புரியவில்லை? செந்தில்பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறான முன்னுதாரணம் என பிரேமலதா தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

 மகளிர் உரிமை தொகைத்திட்ட சிறப்பு முகாம்..! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

click me!