ஆடி 18 முடிந்தது பிரசாந்த் கிஷோர் எடப்பாடிக்காக 1200 ஐடி ஊழியர்களை களத்தில் இறக்கி விட உள்ளார். இதனால், திமுக ஐடி விங் கிலியடித்துக் கிடக்கிறது.
ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் சரிந்து கிடக்கும் அதிமுகவை தூக்கி நிறுத்தி தங்கள் வசப்படுத்தவும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் மெகா பட்ஜெட்டில், தேர்தல் வியூகப்புலியான பிரசாந்த் கிஷோரோடு டீல் பேசி முடிக்கப்பட்டுவிட்டது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை இழந்து தேர்தலில் அதலபாதாளத்தில் சரிந்து விழுந்தது அதிமுகவின் வாக்கு வங்கி. அதேபோல தேர்தல் வியூகங்களை விட, கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஐபேக் கார்பரேட் கம்பெனியின் பிரஷாந்த் கிஷோரை டெல்லியில் சந்தித்து பேசினார். கட்சியில் தன்னை ஒற்றைத் தலைமையாக எடப்பாடி நிலை நிறுத்திக் கொண்டால்தான் அடுத்து வரும் தேர்தலை அதிமுக திடமாக எதிர்கொள்ள முடியும். கட்சியில் இரட்டைத் தலைமை என்றால் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு கடும் சிரமம் இருக்கும் என்று கருதிய எடப்பாடி பிரசாந்த் கிஷோரின் முக்கியத்துவத்தை உணர்ந்து பட்ஜெட் பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் இறங்கியுள்ளார்.
தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்கும் இந்த மெகா திட்டத்திற்காக 1200 ஐடி ஊழியர்கள் களத்தில் இறங்க உள்ளனர். அதற்காக எடப்பாடியிடம் ரூ.150 கோடி பில் கொடுத்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் சம்பளம் மட்டுமே 40 கோடி. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு போதிய உறுப்பினர்கள் இருந்தாலும், திமுகவின் ஆள் தூக்கும் வேலையால், கூடிய விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்பதால் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்றார். ஆனால், தற்போது திமுக அந்த வேலையை கிடப்பில் போட்டுவிட்டது.
இந்நிலையில், மீதமுள்ள நாட்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் காலம் தள்ள வேண்டும் என நினைக்காத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராக வேண்டும் எனத் திட்டமிட்டே பிரசாந்த் கிஷோரை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு தேர்தல் ஆலோசனைக்கு கொடுத்தது. அடுத்து, 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்து. நிதீஷ் குமாரை ஆட்சி அமைக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்தார். ஆனால், இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே போட்டுக் கொடுத்த பிளானை பக்காவாக இம்ப்லீமென்ட் செய்து வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, மேற்குவங்காளத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ளாராம்.
எடப்பாடி, பிரசாந்த் கிஷோர் கொடுத்த பில்லுக்கு எந்த பேரமும் பேசாமல் ஓகே சொல்லி அட்வான்ஸும் கொடுத்து விட்டார்கள். எடப்பாடியின் இந்த மெகா பிளானுக்கு பின்னணியில் பிஜேபி இருப்பதும் உறுதியாகியுள்ளது. அதன்படி ஆடி 18 முடிந்தது பிரசாந்த் கிஷோர் எடப்பாடிக்காக 1200 ஐடி ஊழியர்களை களத்தில் இறக்கி விட உள்ளார். இதனால், திமுக ஐடி விங் கிலியடித்துக் கிடக்கிறது.