ளும் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வியூகங்களை தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்திருந்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றிருக்கும் நிலையில் டெல்லி மக்களுக்கு பிரசாத் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லிக்கு நன்றி' யானா பதிவிட்டிருக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடந்த வாக்கு பதிவில் 62.59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
undefined
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்கிற போதும் அக்கட்சி அதையும் கடந்து இருமடங்கு பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் தலைமையகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக காணப்படுகின்றனர்.
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor)
பாஜக 8 இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வியூகங்களை தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்திருந்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றிருக்கும் நிலையில் டெல்லி மக்களுக்கு பிரசாத் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லிக்கு நன்றி' என பதிவிட்டிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆட்சியமைத்ததற்கு தனது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.
டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!