காதலர்களை கோவிலுக்குள் விடமாட்டோம்...!! கொக்கரிக்கும் அர்ஜுன் சம்பத்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2020, 2:09 PM IST
Highlights

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பெரிய கோவிலில் மட்டுமல்ல வேறு எந்த கோயிலிலும் காதலர்களை அனுமதிக்கக்கூடாது .  அதேபோல் பொது இடங்களிலும் காதலர் தின கொண்டாட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்றார்.

ஆன்மீகக் கொள்கையில் நாட்டமுடைய நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்  நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல  தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது .   இந்நிலையில் அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சும் செயலும் இருந்து வருகிறது . இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருகை தந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ,  அப்போது பேசிய அவர் , 

சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் அசிங்கமாக பேசிய  சீமானை தஞ்சை பெரிய கோயிலுக்குள் அனுமதித்தது தவறு ,  மேலும் அவருக்கு மரியாதை  செய்ததும் தவறு என்றார் .  வருமான வரி விவகாரத்தில் ரஜினியையும் விஜய்யையும்  இணைத்துப் பேசக்கூடாது  என்றார்,   வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரஜினி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது, அதில் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன அப்போது வருமானவரித் துறையே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது .  ஆனால் விஜய் வரியேய்ப்பு செய்துள்ளார் .  அதன் காரணமாகவே வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது தனக்குக் கிடைத்த வருமானத்தை வைத்து கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறார் விஜய் என்றார் .   அதேபோல் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பெரிய கோவிலில் மட்டுமல்ல வேறு எந்த கோயிலிலும் காதலர்களை அனுமதிக்கக்கூடாது .  அதேபோல் பொது இடங்களிலும் காதலர் தின கொண்டாட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்றார். 

வரும் 16ம் தேதி தஞ்சையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெறுகிறது ,  ஆன்மிகக் கொள்கையுடைய கட்சிகளை இணைக்கும் செயலில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும் ,  ஆன்மீக சிந்தனை கொண்ட ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார் என்றார் .  குடமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பின்னர் தமிழகத்திற்கு நல்ல காரியங்கள் நடந்து வருகிறது காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார் பிரதமர் மோடி ,  அதேபோல் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின்  பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் கலந்துகொள்வார்,  ஆனால் அவரால் முதல்வராக முடியாது என கடுமையாக தாக்கினார். 

click me!