முதல்வர் பதவியில் அமர வேண்டுமானால் சில கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
பல்வேறு தேர்தல்களில் தான் சார்ந்த கட்சிக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்த, பிரசாந்த் கிஷோர் டீம், தற்போது திமுகவுக்காக உழைக்க களமிறங்கியுள்ளது. கடைசியாக, இந்த டீம் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பணியாற்றியபோது, அவர் முதல்வராக பதவிக்கு வந்தார். அடுத்த ஆண்டிலேயே திமுகவுடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளது, அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் பதவியில் அமர வேண்டுமானால் சில கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
undefined
அதன்படி,1.தப்பித்தவறிக்கூட பெரியார் பேரை சொல்லக்கூடாது. 2.கி.வீரமணி, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட சிலரை பக்கத்தில் சேர்க்கக் கூடாது.
3. தனிப்பட்ட செல்வாக்கு திறமை உள்ள ஓரிருவர்கள் தவிர வாரிசுகளுக்கு சீட் கிடையாது. 4.கனிமொழி, உதயநிதியை முன்னிலைப்படுத்தக் கூடாது.
5.சி.ஏ.ஏ., என்.பி.ஆர்.விவகாரத்தை இப்போதைக்கு தூக்கி பரணில் வைத்து விட வேண்டும்.
6. அதிமுக ஊழல் ஆட்சி.. அதை அகற்ற வேண்டுமென்று பரப்புரை மேற்கொள்ளக்கூடாது. 7.தனது அறிவுரைப்படி ஒவ்வொரு பகுதியிலும் பகுதிவாரியாக தனித்தனி அஜெண்டா படி பரப்புரை மேற்கொள்ள வேண்டும். 8.எதற்குமே தனது தந்தை கலைஞர் பேரை மேற்கோள் காட்டக்கூடாது. 9.சர்ச், மசூதிகளுக்கு சென்று இந்துமத துவேசத்தை வழக்கம்போல எழுப்பக்கூடாது என பிரசாந்த் கிஷோரிடம் இருந்து ஒன்பது கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.