இதுவரை சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்ன..? தலைமை நீதிபதி கேள்வியால் தலையில் அடித்து புலம்பும் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Feb 4, 2020, 1:33 PM IST
Highlights

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபாநாயகருக்கு இப்படித்தான் உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது. எனவே இவர்கள் தொடர்ந்துள்ள இந்த மனுக்கள் அடிப்படை முகாந்திரமற்றதாக உள்ளது என்று வாதிட்டார். இதனையடுத்து, திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.களை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு 2017 மார்ச் 20-ம் தேதி கொடுத்த மனு மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு அதற்கான உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் இதுவரை சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்னென்ன என்பது பற்றி பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க;- வீரபாண்டியாரின் அத்தியாயங்களை அழித்த மு.க.ஸ்டாலின்... திமுகவுக்குள் மூக்கை நுழைக்கும் ராமதாஸ்..!

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையும் படிங்க;-  நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது... ரஜினிக்கு ஆதரவாக கோதாவில் இறங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி..? அதிர்ச்சியில் திமுக..!

இதையடுத்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சபாநாயகர் விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த சக்கரபாணியும், தங்க தமிழ்ச்செல்வனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபாநாயகருக்கு இப்படித்தான் உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது. எனவே இவர்கள் தொடர்ந்துள்ள இந்த மனுக்கள் அடிப்படை முகாந்திரமற்றதாக உள்ளது என்று வாதிட்டார். இதனையடுத்து, திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.களை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு 2017 மார்ச் 20-ம் தேதி கொடுத்த மனு மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு அதற்கான உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

இதையும் படிங்க;- சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் மாற்றம்... அடித்து கூறும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ..!

இதனிடையே, குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார். தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா? என காட்டமாக தெரிவித்தார். மேலும், திமுக கொடுத்த மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்னென்ன என்பது பற்றி பதில் அளிக்க சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

click me!