பிற்போக்கான, இருண்ட பாதையை நோக்கி இந்தியா போகுதே… மோடிக்கு எதிராக வெடித்த பிரணாப் முகர்ஜி…

First Published Jul 2, 2017, 6:27 AM IST
Highlights
pranab mujarji speech about cow problem at delhi


பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களை அடித்து கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காட்டமாக தெரிவித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,  சமுதாயம் பிற்போக்கான மற்றும் இருண்ட பாதையை நோக்கி செல்கிறதா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆவதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சார்பில் நினைவு சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, பொதுமக்களை விசாரணையின்றி அடித்து கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது என்றும்  நாட்டின் அடிப்படை கோட்பாடுகளை காப்பாற்ற நமது சமுதாயம் போதுமான விழிப்புடன் செயல்படுகிறதா?  என கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களை கும்பல்கள் அடித்து கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது என வேதனை தெரிவித்த பிரணாப் இந்த சம்பவங்களை நாம் உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களை அடித்து கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த பிரணாப் முகர்ஜி, சமுதாயம் பிற்போக்கான மற்றும் இருண்ட பாதையை நோக்கி செல்கிறதாக எனவும் குடியரசுத் தலைவர் கேள்வி  எழுப்பினார்

click me!