பெங்களூரு மேற்கு தொகுதியில் களம் இறங்கும் பிரகாஷ் ராஜ் !! காங்கிரஸ் கட்சி அதிரடி ஆதரவு !!

Published : Feb 20, 2019, 08:18 PM ISTUpdated : Feb 20, 2019, 08:21 PM IST
பெங்களூரு மேற்கு தொகுதியில் களம் இறங்கும் பிரகாஷ் ராஜ் !!  காங்கிரஸ் கட்சி அதிரடி ஆதரவு !!

சுருக்கம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களுரு மேற்கு  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.  

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பெண் எழுத்தாளர்  கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பாஜகதான்  காரணம் என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டி வருகிறார். இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். கர்நாடக மாநிலத்தில்  சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து  கர்நாடக மாநிலத்தின்  அனைத்து பகுதிகளுக்கும் சென்று அவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.


இதையடுத்த எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மேற்கு தொகுதியில் பாஜகவுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடப் போவதாக பிரகாஷ்  ராஜ் அறிவித்தார்.

 மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அந்தத் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரு மேற்கு தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் ராஜுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!