மோடியின் முதன்மை சீடர்தான் எடப்பாடி பழனிசாமி…பிரகாஷ் காரத் கடும் தாக்கு…

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 06:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மோடியின் முதன்மை சீடர்தான் எடப்பாடி பழனிசாமி…பிரகாஷ் காரத் கடும் தாக்கு…

சுருக்கம்

Prakash karat speech

மோடியின் முதன்மை சீடர்தான் எடப்பாடி பழனிசாமி…பிரகாஷ் காரத் கடும் தாக்கு…

விவசாயிகள் பிரச்சனையில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய முதன்மை சீடராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரகாஷ் காரத் , பா.ஜ.க. அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை பெட்ரோல், டீசல் விலை 11 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆண்டு தோறும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்த மோடி அதை நிறைவேற்றினாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்ததால் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகள் தங்களின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி கொண்டனர் என காரத் குற்றம்சாட்டினார்.

இத்திட்டத்தால் ஏழை,எளிய மக்கள்தான்  மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  

தமிழகத்தில் 275 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இது குறித்து மத்திய,மாநில அரசுகள் கவலைப்படவில்லை என தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்சனையில் . மோடியின் சிறந்த சீடராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி விளங்குகிறார் என பிரகாரஷ் காரத் தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்