நடிகர் பிரபாசுடன் தொடர்பா ? பெண் அரசியல்வாதியை இணைத்து வச்சு செய்யும் நெட்சன்கள் !!

Published : Jan 16, 2019, 08:29 AM IST
நடிகர் பிரபாசுடன் தொடர்பா ? பெண் அரசியல்வாதியை இணைத்து வச்சு செய்யும் நெட்சன்கள் !!

சுருக்கம்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவுடன், பிரபல  நடிகர் பிரபாசை இணைத்து சமூக வளைதளங்களில் செய்திகள் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர், - காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, 45 வயதாகும்  இவருக்கும், 'பாகுபலி' படத்தில் நடித்த, பிரபாசுக்கும் தொடர்பு உள்ளதாக சித்தரித்து, இணையதளங்களில் சமீப காலமாக செய்திகள் உலவின.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, தன் கணவர் அனில் குமாருடன் சென்று, போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமாரை நேற்று சந்தித்தார்.

அப்போது, தன்னையும், நடிகர் பிரபாசையும் தொடர்பு படுத்தி, உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அதன் பின்னணியில், தெலுங்கு தேசம் கட்சியினர் இருப்பதாக சந்தேகிப்பதாவும், தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் வலியுறுத்தினார்.

பின் நிருபர்களை சந்தித்த ஷர்மிளா நாடாளுமனற  தேர்தல் வரவுள்ள நிலையில் என் புகழுக்கு களங்கம் விளைவிக்க, எதிரிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, என்னையும், நடிகரையும் தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!