கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு அரசியல் வரலாற்றிலேயே மோசமானது… கிழித்து தொங்கவிட்ட மோடி !!

Published : Jan 16, 2019, 07:01 AM IST
கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு அரசியல் வரலாற்றிலேயே  மோசமானது… கிழித்து தொங்கவிட்ட மோடி !!

சுருக்கம்

கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் இடதுசாரி அரசு மக்களையும் மதிப்பதில்லை, இந்திய கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, அரசியல் வலாற்றில் இது போன்ற ஒரு மோசமான ஆட்சி வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம்  கொல்லத்தில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது , கேரளாவில் பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பாஜக விரும்புவதாக தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்..

இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது என மிகக்டுமையக குற்றம்சாடினார்.

இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான என்றும் பிரதமர் மோடி பேசினார்

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!