28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து !! முதலமைச்சர் அதிரடி !!

Published : Jan 16, 2019, 06:14 AM IST
28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து !! முதலமைச்சர்  அதிரடி !!

சுருக்கம்

கேரளாவில் உள்ள 28 பாலங்கள் மற்றும்  சாலைகளுக்கான சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சுங்கச்சாவடி சட்டத்தின்படி, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான கட்டுமானச் செலவைக் கொண்டிருக்கும் பாலங்களுக்கான சுங்கச் சாவடி கட்டணத்தை அம்மாநில அரசே வசூல் செய்து வந்தது.  இந்நிலையில்  மாநில பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட 6 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை கடந்த நவம்பர் மாதம் அம்மாநில அரசு நிறுத்தியது. மீதமுள்ள 14 பாலங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே இனிமேல் எந்தப் பாலத்துக்கோ, சாலைக்கோ சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார். . அதன்படி அரசு தற்போது 28 பாலங்கள் மற்றும் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளது. தற்போது 10 பாலங்கள் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கேரளாவில் தற்போது சாலைகள் மற்றும் பாலங்களுக்கான அமைப்பு சுங்கக் கட்டணங்களை வசூல் செய்து, அதன் மூலம் பாலங்கள் கட்டுவதற்கு ஆன கடனை திரும்பச் செலுத்தி வருகின்றன.

ஆனால் இனிமேல் அந்த செலவுகளை கேரள அரசே செலுத்த முடியு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் 28 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுளளது.

இதுதொடர்பான  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28  பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. இந்த பாலங்களை கட்டியதற்கான கட்டுமானச் செலவு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள. கும்பளம் சுங்கச் சாவடி மற்றும் பளிக்காரா சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொது மக்களின் மீது இத்தகைய  சுமையை செலுவத்துவது சரியாகாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்