பகவான் கிருஷ்ணரை ‘பொறுக்கி’ என்று திட்டிய காரப்பனுக்கு மத்தியரசில் பதவி: குமுறும் பா.ஜ.க! வானதிக்கு வந்து சேரும் வம்பு..!

By Vishnu PriyaFirst Published Oct 25, 2019, 6:21 PM IST
Highlights

கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்த பிரபல தறி நெசவாளர் காரப்பன்.  இவர் சமீபத்தில் பெரியார் அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு இந்து தெய்வங்களை, அதிலும் குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும், அத்தி வரதரையும் அசிங்கம் அசிங்கமாக திட்டினார். இந்த வீடியோ வைரலாகி, பெரும்பான்மை இந்துக்கள் கொதித்த்துக் கிடக்கின்றனர். காரப்பனை கைது செய்ய சொல்லி புகார்கள் குவிகின்றன. 

இந்த நிலையில் காரப்பன் விவகாரத்தால் தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளரான வானதி சீனிவாசனுக்கு பெரும் சிக்கல் வந்து சேர்ந்துள்ளதாம். காரணம், இந்த காரப்பனை ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு அழைத்து, பொன்னாடையெல்லாம் போர்த்திக் கவுரவித்த வானதி, அவரை மத்தியரசின் டெக்ஸ்டைல் ஆலோசனை கமிட்டியில் உறுப்பினராக சேர்த்தும் உள்ளார்! இது எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம்! என்று தமிழக பா.ஜ.க.வுக்கு உள்ளேயே இருந்தே சிலர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். காரப்பன் விவகாரம் பெரும் பிரச்னையாக தலையெடுத்திருக்கும் நிலையில், வானதி சீனிவாசனோ “நெசவாளர்களை வைத்து நான் நடத்திய நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொண்டார் அவ்வளவே. மற்றபடி அவருக்கு நான் எந்த சலுகையோ, முன்னுரிமைகளோ, பதவிகளோ வழங்கவேயில்லை.” என்று பதறி விளக்கம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பா.ஜ.க.வின் முக்கிய அதிகார மையங்கள் சிலர் இந்த விஷயத்தில் வானதியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டே உள்ளனர். 

காரணம், காலியாக கிடக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நடக்கும் ரேஸில் வானதி மிக முக்கிய இடத்தில் இருக்கிறார். அநேகமாக அவருக்கு அந்தப் பதவி கிடைத்திட, மிக மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளன! என்கிற சூழ்நிலை உள்ளது. இதை உடைக்கவே அக்கட்சியை சேர்ந்த, தாங்களும் மாநில பொறுப்புக்கு போட்டியிடுகிற சில நபர்கள் இந்த வேலையைப் பார்க்கின்றனர்! என்கிறார்கள்.
அடங்கொன்னியா!

click me!