மின்வெட்டு குறித்து ட்வீட் போட்ட பி.சி. ஸ்ரீராம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு என்ன பதில் அளித்தார் தெரியுமா?

Published : Jun 26, 2023, 12:57 PM ISTUpdated : Jun 26, 2023, 01:08 PM IST
மின்வெட்டு குறித்து ட்வீட் போட்ட பி.சி. ஸ்ரீராம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு என்ன பதில் அளித்தார் தெரியுமா?

சுருக்கம்

சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தங்களது பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் ஒன்றைய பதிவிட்டிருந்தார்.

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். 

சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், தேவர் மகன், அலைபாயுதே உள்ளிட்ட வெற்றி படங்களை ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம் தங்களது பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் ஒன்றைய பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க;- ராஜ்பவனை சுத்தமாக வைப்பது தான் ஆளுநரின் வேலை.. அதை மட்டும் பாருங்கள்.. இறங்கி அடிக்கும் தயாநிதி மாறன்.!

அதில்,  சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. என்ன நடக்கிறது..? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து பி.சி.ஸ்ரீராமுவின் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். 

 

அதில், மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுட்டு போய் மணிப்பூரை கவனியுங்கள்!அமித்ஷாவுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?