இன்னும் 2 நாள்தான்… அப்புறம் கரண்டே இருக்காது…. அதிர வைக்கும் அமைச்சர்

By manimegalai aFirst Published Oct 10, 2021, 7:02 PM IST
Highlights

தலைநகர் டெல்லியில் 2 நாட்களுக்கு பின்னர் முழுமையாக மின்சாரமே இருக்காது என்று அதிர வைத்துள்ளார் அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.

டெல்லி: தலைநகர் டெல்லியில் 2 நாட்களுக்கு பின்னர் முழுமையாக மின்சாரமே இருக்காது என்று அதிர வைத்துள்ளார் அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.

தமிழகம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்தட்டுப்பாட்டை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. காரணம் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்ததே. தலைநகர் டெல்லியில் 2 நாள்களுக்கு கரண்ட்டே இருக்காது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறி இருப்பதாவது: நிலக்கிரி வினியோகத்தில் முன்னேற்றம் எட்டப்படவில்லை என்றல் அடுத்த 2 நாட்களில் டெல்லி முழுவதும் மின்தடை ஏற்படும்.

இங்கு மின்விநியோகம் செய்யும் ஆலைகளில் போதிய நிலக்கரி இருப்பு இல்லை. ஒரு நாளுக்கு மட்டும் நிலக்கரி இருப்பில் உள்ளது என்று கூறினார். இது குறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், மின் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான நிலக்கரியை வினியோகிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நிலக்கரியின் மூலம் 135 மின் ஆலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டில் 70 சதவீதம் மின் தேவையை அவை பூர்த்தி செய்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆலைகளில் நிலக்கரி இருப்பு உள்ளது என்று முன்னரே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

click me!