
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையே இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அடிக்கடி சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே சென்னைக்கு மின்சாரம் வழங்கி வரும் வட சென்னை அனல்மின் நிலையத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண பாக்கியை தமிழக அரசு செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதற்கும் மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மின்தடை சீர்செய்யபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கூட சென்னையின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. தற்போது வரை மின்தடை நீங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையே இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.