
எதையும் திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் இல்லாமலே சாதித்தவர் சசிகலா. அதனால்தான், சிங்கம் போல கர்ஜிக்கும் ஜெயலலிதாவையே தம் வசப்படுத்தி வைத்திருந்தார் சசிகலா.
ஆனால், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட்டு இன்று கட்சியையும், ஆட்சியையும் இழந்து விட்டு நிற்கிறார் தினகரன்.இதுதான், சசிகலாவின் சாதுர்யத்திற்கும், தினகரனின் அதிரடிக்கும் உள்ள வித்யாசம்.
தினகரன் கைது செய்யப்பட்ட விஷயம், நேற்று காலை, விவேக் மூலமாகத்தான் சசிகலாவை சென்றடைந்திருக்கிறது. அதை கேட்டு கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.
மக்கள் நம் குடும்பத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள். மத்திய அரசும் நம்மை ஒழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால், தேர்தலில் நிற்க வேண்டாம் என்று படித்து சொன்னேன். தினகரன் கேட்கவே இல்லையே.
ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியை எவ்வளவு கட்டு கோப்பாக வைத்திருந்தேன். அனைத்தையும் இரண்டே மாதத்திற்குள் இழந்து விட்டு நிற்கிறான் அவன் என்று அவர் மிகவும் வேதனையுடன் கூறி இருக்கிறார்.
என்னை வந்து பார்க்க சொல்லி எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். அவன் ஒருபோதும் அதை காதில் போட்டு கொள்ளவே இல்லையே. நானே வெறுத்து போன பிறகு, அனைத்தையும் இழந்த பின்னர் என்னை சந்திக்க வந்து திரும்பி போய் இருக்கிறான் என்றும் சொல்லி இருக்கிறார்.
அதன் பின்னர், கட்சி அலுவலகத்தில் இருந்த உங்கள் படத்தையும், தினகரன் படத்தையும் அகற்றி விட்டார்கள் என்று விவேக் தயங்கி, தயங்கி சொல்லி இருக்கிறார்.
கட்சியும், ஆட்சியுமே கையை விட்டு போன பிறகு, படம் மட்டும் இருந்து என்ன சாதிக்க போகிறது? என்று ஒரே வார்த்தையில் வெறுப்புடன் சொல்லி இருக்கிறார் சசிகலா.
கட்சி, ஆட்சி என அனைத்தும் கை விட்டு போவதற்கு காரணமாக இருந்தவன், தினகரன் தானே? அனைத்தையும் கெடுத்த அவன் அனுபவிக்கட்டும் என்றும் சபிப்பது போல் கூறிய சசிகலா,
அடுத்து என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக கூறப்படுகிறது.