அதிமுக பொதுக்குழுவை ஒத்திவையுங்கள்.... எடப்பாடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்..!

Published : Jun 20, 2022, 12:55 PM ISTUpdated : Jun 20, 2022, 01:06 PM IST
அதிமுக பொதுக்குழுவை ஒத்திவையுங்கள்.... எடப்பாடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்..!

சுருக்கம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

ஒற்றை தலைமை விவகாரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அதில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள கழகப் பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பொதுக் குழு நாடபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். 

செய்தியாளர்கள் முன்னிலையில் வைத்தியலிங்கம் படித்து காட்டினார். ஈபிஎஸ் தரப்பின் பதிலை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒற்றை தலைமை விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும், தொண்டர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள் எனவும், பொதுக்குழுவை மீண்டும் எப்போது நடத்துவது என்பது பற்றி இணைந்து முடிவெடுக்கலாம் எனவும் அக்கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், மரபுப்படி சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழுவுக்கு அழைக்கவில்லை எனவும், பொதுக்குழு நிகழ்ச்சி நிரல் எதுவும் இதுவரை அனுப்பவில்லை எனவும் ஓபிஎஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!