அதிமுகவிலிருந்து வந்தவருக்கு பதவியா..? வி.பி.கலைராஜனுக்கு கொரோனா வதந்தியை பரப்பிய உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 17, 2020, 11:07 AM IST
Highlights

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.பி.கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என விளக்கமளித்துள்ளார். 
 

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.பி.கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என விளக்கமளித்துள்ளார். 

ஜெ. அன்பழகனை மாவட்ட செயலாளராக கொண்டிருந்த சென்னை மேற்கு மாவட்ட திமுகவுக்கு அவரது மறைவை அடுத்து யாரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது திமுகவுக்குள் தற்போது தீவிர விவாதமாகியிருந்தது.

 

சென்னை மேற்கு மாவட்டம் என்பது திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயம் இருக்கும் பகுதிக்குள் வருகிறது. மேலும் மிக முக்கியமான வணிக ஏரியாக்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்துக்கு செயலாளர் ஆனால் வரவும் அதிகம், செலவும் அதிகம். வரவைக் கையாள வேண்டும்,செலவை எதிர்கொள்ள வேண்டும். இந்த இரு திறமைகளும் படைத்தவரைத்தான் மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமிக்க முடியும். அந்த வகையில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான கலைராஜனை மாவட்ட செயலாளாரக்க திட்டமிட்டு இருந்தனர். 

இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தலவல் வெளியானது. அதிமுக உடைந்தபோது தினகரன் அணிக்குச் சென்று அங்கு ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார் கலைராஜன். திமுக எடுத்து வந்த கொரோனா உதவி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர் இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்பட்டது.  

இந்நிலையில்  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. எந்தவித கொரோனா தொற்றும் ஏற்படவில்லை.நான் எனது இல்லத்தில் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

ஜெ.அன்பழகனின்  மாவட்டச்செயலாளர் பதவி அடுத்து வி.பி.கலைராஜனுக்கு வழங்கப்பட திமுக தலைமை முடிவெடுத்து இருந்தது. ஆனால், வி.பி.கலைராஜன் அதிமுக, அமமுகவில் இருந்து வந்தவர். அவருக்கு அந்தப்பதவியை வழங்கக்கூடாது என திமுக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பித் தெரிவித்து வந்தனர். அவர்களே வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பியுள்ளார்கள் என வி.பி.கலைராஜன் ஆதரவாளர்கள் அதிருப்தியாகி உள்ளனர். 

நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. எந்தவித கொரோனா தொற்றும் ஏற்படவில்லை.நான் எனது இல்லத்தில் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

— V.P.கலைராஜன் M.A.,B.L., (@VPKalairajan)

 


 

click me!