"ஆர்.கே நகரில் வென்று காட்டுங்கள்..!!!" - சசிகலாவுக்கு 'சவால்' விடும் ஷீலா பாஸ்கரன்

 
Published : Dec 20, 2016, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
"ஆர்.கே நகரில் வென்று காட்டுங்கள்..!!!" - சசிகலாவுக்கு 'சவால்' விடும் ஷீலா பாஸ்கரன்

சுருக்கம்

இந்தியாவின் மிகபெரிய மூன்றாவது கட்சியாக விளங்கும் அதிமுகவின் ஒட்டு மொத நிர்வாகிகளும் பெட்டிப்பாம்பாக சின்னம்மா சசிகலாவிடம் சரணடைந்து விட்டனர்.

ஆனால் ஜெயலலிதா மறைந்த நாள் முதலே கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரை உள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவின் தீவிர தொண்டர்கள் சின்னம்மா சசிகல்வுக்கு பெரும் சவாலாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

தஞ்சை பேராவூரணி மதுரை திருச்சி தருமபுரி சேலம் வேலூர் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மை அடித்தும் சாணம் பூசியும் பல வகைகளில் தங்கள் எதிர்ப்புகளிலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டான்சி வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதா சிறையில் அடைக்கப்ட்டபோது அதை கண்டித்து போராட்டங்கள் மேற்கொண்டதால் கைது செய்யபட்ட தலித் ஷீலா பாஸ்கரன் என்பவர் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளார் .

அந்த போஸ்டரில், ஜெயலலிதா நின்று வெற்றி பெற்று தற்போது காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கொள்ளுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

அதிமுக தொண்டர் ஷீலா பாஸ்கரனின் இந்த பரபரப்பு போஸ்டரால் வடசென்னை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

ஷீலா பாஸ்கரனால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரை வடசென்னை அதிமுக நிர்வாகிகள் பார்த்து பார்த்து கிழித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு