
முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தபிறகு யார் வாரிசு என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தற்போது கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார்.
தனியார் தொலைகாட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளுக்கு தீபா பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில் தேர்ந்த அரசியல்வாதி போன்று பேசினார்.
பேட்டியின்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த தீபா "அத்தை உயிரோடு இருக்கும்போது என்னை பார்க்கவேண்டாம் என்று சொன்னார் சரி..!! அத்தை இறந்தபிறகும் அத்தைதான் என்னை வரவேண்டாம் என தடுத்தாரா?" என பதில் கேள்வி எழுப்பி திடுக்கிட செய்தார்.
தீபாவின் இந்த நிதானமான தெளிவான பேட்டி ஜெ விசுவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.