
சட்டமன்ற தேர்தல் அன்று சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்று தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதற்கான வாக்குப் பதிவு விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது. வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்திற்கு ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தேர்தலன்று பணியில் ஈடுபடும் தேர்தல் பணியாளர்கள் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் இருக்கக்கூடிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்த உள்ளனர். இதற்காக 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தனியாக வாக்குப் பதிவு மையங்கள் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் வாக்கு பதிவு நடைபெறும் மையங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் புதிதாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டுகளை பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 5 நாட்களாக பெறப்பட்டு வருகிறது. இன்றுடன் இந்த தபால் வாக்குகளை வீடுகளுக்கு சென்று பெரும் அவகாசமானது முடிவடைகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பணியில் ஈடுபடக் கூடிய காவலர்கள் தங்களுடைய தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர்.
1) வில்லிவாக்கம்- 152
2) துறைமுகம்- 67
3) ஆர்.கே.நகர்-163
4) கொளத்தூர்-300
5) சேப்பாக்கம்-179
6) ராயபுரம்-548
7) அண்ணாநகர்-165
8) சைதை-200
9) வேளச்சேரி-252
10) எழும்பூர்- 689
11) திரு.வி.க நகர்-235
12)தி.நகர்- 175
13) ஆயிரம் விளக்கு-337
14 மயிலாப்பூர்-266
15)விருகம்பாக்கம்-165
(15 தொகுதிகள் மட்டும் மொத்தம் 3718) 16 தொகுதியில் கிட்டத்ட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்குகளை மையங்களில் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.