தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு தடை.. தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 11:38 AM IST
Highlights

அதேபோல் அசாமுக்கு இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மேற்கு வங்கத்திற்கு இறுதி மற்றும் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ஆம் தேதியே நடைபெற உள்ளது.  

அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட 29 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களும் ஒரே கட்டமாக  அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் எட்டு கட்டங்களாக மேற்கு வங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு இதுவரை 3 கட்ட தேர்தல் மட்டுமே முடிந்துள்ளது. 

அதேபோல் அசாமுக்கு இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மேற்கு வங்கத்திற்கு இறுதி மற்றும் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ஆம் தேதியே நடைபெற உள்ளது. ஆனால் தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நேற்றே 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்து இருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை 29ஆம் தேதி இரவு 7:30  மணிக்கு பின்னரே வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 

முதலில் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தவும், அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக்கல் ஊடகங்கள் அல்லது வேறு வழிகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 29ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு பிறகே  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!