தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்! ஆதரவுக்காக இப்படி தேடி ஓடுகிறார்களே? வேதனையில் பூங்குன்றன்..!

By vinoth kumar  |  First Published Jan 23, 2023, 11:55 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை போட்டி போட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருவது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் தனித்தனியாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக இபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் தலைமையில், ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். அவர் இபிஎஸ் அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரசியலில் அண்ணாமலை வளர்ந்து கொண்டிருக்கிறார்.. அதுக்கு இதுவே சாட்சி.. ஜெ. உதவியாளர்..!

அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசனை ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் அணி சார்பில் இறக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார். ஜி.கே.வாசனும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். அதேபோல், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி  தலைவர் எம்.ஜெகன் மூர்த்தி ஆகியோரை ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணியினர் தனித்தனியாக சந்தித்து பேசி ஆதரவு கோரினர். இது ஒருபுறம் இருக்க இபிஎஸ் அணியினர் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்று அண்ணாமலையிடம் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆதரவு கோரினர். 

அவர்கள் சந்தித்து சென்ற அடுத்த சில நிமிடங்களில் ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ் இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்க தயார் என்றார். 

அதே நேரத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவிப்பது வழக்கம். இது தான் காலம், காலமாக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த இடைத்தேர்தல் இதனை புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஓபிஎஸ், இபிஎஸ் அணியை சேர்ந்த தலைவர்கள், கூட்டணி கட்சியினரின் அலுவலகம், அலுவலகமாக ஏறி, இறங்கி ஆதரவு கோரியுள்ளனர். அதுவும் செல்வாக்கு இல்லாத கட்சிகளிடமும், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிர்வாகிகளே இல்லாத கட்சிகளிடமும் ஓபிஎஸ், இபிஎஸ் வலிந்து சென்று ஆதரவு கேட்டு நிற்பதைப் பார்த்து தொண்டர்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். இதுதொடர்பாக பூங்குன்றன் முகநூல் பதிவில்;- தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவை தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே! என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக நிலை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

click me!