ஈரோடு இடைத்தேர்தல்.! ஆதரவு கேட்டு கமல்ஹாசனை சந்திக்கவுள்ளேன்..! ஈவிகேஎஸ் அதிரடி

By Ajmal KhanFirst Published Jan 23, 2023, 11:48 AM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலினை சந்தித்த ஈவிகேஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். 

கமலிடம் ஆதரவு கேட்பேன்-ஈவிகேஎஸ்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பிரசாரம் செய்து வருவதற்கு நன்றி தெரிவித்தோம். மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தெரிவித்தவர் அவரிடம் தனக்கு ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் எதிரணியாக உள்ள அதிமுக, பாஜகவில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் வேட்பாளரை தேர்வு செய்யாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

மோடியின் டுவிட்டை ரீ டுவீட் செய்த மு.க.ஸ்டாலின்.! அனைத்து மொழிகளிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

click me!