
ஜெயலலிதாவை சசிலா ஆணிக்கட்டையால் அடித்ததால் அவர் கன்னத்தில் ஏற்பட்ட நான்கு புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது இதுவரை உலகில் யாரும் கண்டுபிடிக்காத விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சியில் பேட்டியளித்த அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளதாவது; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கன்னத்தில் உள்ள நான்கு புள்ளிகள் எம்பார்மிங் செய்யப்பட்டதால் ஏற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் விசாரணை கமிஷனிடன் என்ன கூறினார் என்பது நமக்கு தெரியாது. சசிகலா கெட்டிக்காரி, அறிவாளி என்பதை ஒப்புக் கொள்கிறேன். இதை பல முறை மீடியாவிடம் சொல்லியிருக்கிறேன். எம்பார்மிங் செய்யாவிட்டால் அந்த புள்ளி எப்படி வந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் பார்க்கும்போது ஜெயலலிதாவை கட்டையால் அடித்தார்கள் என்பதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சசிகலாவின் கெட்டிக்காரத்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் ஜெயலலிதாவின் கொலைக்கு பயன்படுத்தி அந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டார்களே.
ஜெ., இருக்கும் வரை சசிகலாவால் ஆட்சி யில் அமர முடியாது, அதற்கு ஜெயலலிதா இடைஞ்சலாக இருப்பதால் அவரை தீர்த்து கட்டி விட்டு ஆட்சிக்கு வந்தால் எப்படி என சசிகலா சதித் திட்டம் போட்டு. ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவுக்கு நிறைய பணம் கொடுத்து பொய் சாட்சி கூறவைத்ததால் அவர் அவரது அத்தைதான் ஜெ.வுக்கு பிரசவம் பார்த்ததாக கூறி இப்போது அம்மாவுக்கு அவப் பெயரை உருவாக்குகிறார்கள்.