
முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. தினம் தினம் தொண்டர் கூட்டம் , கட்சி நிர்வாகிகள் கூட்டம் பெரிய அளவில் பொதுமக்கள் கூட்டம் தினந்தோறும் அப்போலோ வாசலில் நிற்பது வாடிக்கை.
முதல்வர் நலம் பெற வேண்டி பொதுமக்கள் , மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பூஜைகள் செய்து வருகின்றனர். முதல்வர் தற்போது உடல்நிலை தேறி நலமடைந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு முதல்வர் உடல் நலம் பெற வேண்டி அதிமுக மகளிர் அணியை சேர்ந்த கவுன்சிலர் வேளாங்கன்னி மற்றும் குண்டு கல்யாணம் மனைவி ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பவுர்ணமி பூஜை நடத்தப்பட்டது.
இந்த பூஜையில் 108 தேங்காய்களை குடைந்து அதில் நெய் ஊற்றி 108 விளக்கு பூஜை நடத்தினர். இதில் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.