
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் பல அரசு வேலைகளுக்கு சசிகலா குடும்பத்தினர் பணம் வாங்கி கொண்டு பதவிகளை கொடுத்ததாக ஒ.பி.எஸ் ஆதரவாளர் பொன்னையன் பகீர் கிளப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பொன்னையன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி தலைமையிலான அரசு பொதுக்குழுவை கூட்டி சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் நீக்குவதாக அறிவிக்க வேண்டும்.
மற்ற கட்சி நிர்வாகிகளுக்கு என்ன நிபந்தனையோ அதே போன்று அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் வைத்து கொள்ள கூடாது என அறிக்கை விட வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் இப்போது நானே ஒதுங்கி கொள்கிறேன் என்று சொன்ன தினகரன் நானே சேர்ந்து கொள்கிறேன் என்று கட்சிக்குள் வருவார். அதை தடுக்க முன்னேற்பாடு எடுக்க வேண்டும்.
சசிகலாவை எல்லா பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும். விஜயபாஸ்கரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் ஆயா போஸ்ட் முதல் டீச்சர் போஸ்ட் வரை பல அரசு வேலைகளுக்கு சசிகலா குடும்பத்தினர் பணம் வாங்கி கொண்டு பதவிகளை கொடுத்தனர்.
அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கி தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டனர்.
இதையடுத்து ஒ.பி.எஸ் தலைமையில் தூய்மையான ஆட்சி நடக்கும்.
அவைத்தலைவர் , அவை முன்னோர், அமைச்சர் என எல்லா பதவியும் வகுத்து விட்டேன். இனி எந்த பதவியும் நீங்கள் வாங்கி தந்தாலும் எனக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.