எடப்பாடியை போல இந்தியாவிலேயே ஒரு முதலமைச்சர் இல்லை... எதிர்க்கட்சியை பொடிமாஸ் பண்ணிய பொன்னையன்!

By vinoth kumarFirst Published Oct 14, 2018, 3:09 PM IST
Highlights

முதல்வருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என நான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கமளித்துள்ளார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது என்றார்.

முதல்வருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என நான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கமளித்துள்ளார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யலாம் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டார். முதல்வரின் நிர்வாக அணுகுமுறை அனைவாராலும் பாராட்டப்படுகிறது.

 

 நெடுஞ்சாலை துறையில் ஆன்லைன் மூலம் விடப்பட்ட டெண்டர் முறையில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக வங்கி விதிப்படி தான் ஆன்லைன் முறை. அதிமுக ஆட்சியில் தான், டெண்டரில் ஆர்டிஜிஎஸ் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என பொன்னையன் கூறியுள்ளார். 

ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும். மேலும் சொந்த மகளுக்கு 280 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்தவர்கள், அதிமுக அரசை குறை சொல்வதா எனவும் பொன்னையன் கேள்வி எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

click me!