பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா!!

By vinoth kumarFirst Published Oct 14, 2018, 11:29 AM IST
Highlights

கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeeToo மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவியை ராஜினமா உடனடியாக செய்யவேண்டும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதனால் தந்து அமைச்சர் பதவியை ராஜினமா செய்து ராஜினமா கடிதத்ததை மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்  ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலமாக எம்.ஜே.அக்பர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டில் இப்போது அரசியல், சினிமா, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தற்போது தூக்கத்தை தொலைத்து, கதி கலங்கி போயுள்ளனர். 

அதற்கு காரணம், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ என்ற ‘ஹேஸ்டேக்’தான். பல ஆண்டுகளுக்கு முன் தங்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய ரகசியங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது இதில் வெளியிட்டு வருகின்றனர். இதில், தங்களால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாவது பழைய ரகசியத்தை வெளியிட்டு விடுவார்களோ என பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த ‘மீ டூ’வில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கூட பெண்கள் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர்.

  

இதில், சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் என பலர் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது அரசியலும் இணைந்து விட்டது.  பத்திரிகை துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீதும் சில பெண்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டை, ‘ #Metoo வில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில்,  மத்திய அமைச்சர்  மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட 6 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரிகை நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக இருந்தபோது அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டு  எழுந்தது.  

இந்நிலையில், நேற்று  அக்பர் மீதான் பாலியல் புகார் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கேள்வி கேட்டபோது, #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வந்த புகாரை குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும். புகார் யார் தந்தது, அவர்களின் பின்னணி என்ன? புகாரின் உண்மைதன்மை என்ன? போன்ற விசியங்களை ஆராய்ந்து, பின்னர் முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சரே இன்று தந்து பதவியை ராஜினமா செய்ததாக கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 6 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று இரவு 11 எட்டியது அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது.

click me!