பொங்கலுக்கு ரூ.500... உள்ளாட்சித் தேர்தல் வெற்றி உறுதி... துள்ளிக்குதிக்கும் ர.ர.,க்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 14, 2019, 4:15 PM IST
Highlights

பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு ரூ.500 பணம் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் குடும்பத்திற்கு ரூ.500 கொடுக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.1000 பணம், பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த சில தினங்களில் பொங்கல் பண்டிகையும் வர இருக்கிறது. 

இதனை மனதில் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு ரூ.500 பணம் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம். டிசம்பர் 25ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், டிசம்பர் முதல் தேதியிலேயே இந்தப்பணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால், மக்களிடம் நற்பெயரை பெற்று உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என ரத்தத்தின் ரத்தங்கள் துள்ளிக் குதித்து வருகிறார்கள்.  இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண முடிப்பு ரேஷன் கடைகள் வழியாக கொடுக்கப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!