பொங்கல் திருநாள்…. தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து !!

 
Published : Jan 14, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பொங்கல் திருநாள்…. தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து !!

சுருக்கம்

Pongal greetings Prime Minister Modi

தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு வருகின்றனர். 

தொடர்ந்து கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பானையடி, கயறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் நரோந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் மகரசங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்தந்த மொழிகளில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் .

தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!