Pongal Gift: செம ஹேப்பியான நியூஸ்.. ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி.. எவ்வளவு தெரியுமா?

Published : Dec 23, 2021, 07:01 AM ISTUpdated : Dec 23, 2021, 07:05 AM IST
Pongal Gift: செம ஹேப்பியான நியூஸ்.. ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி.. எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசு தொகையை வழங்கப்படவுள்ளது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூபாய் 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், அதை உறுதிப்பபடுத்தும் விதமாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ய ஏதுவாக, அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட வேண்டும். ஒரே தவணையில் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். சப்ளை பணி முறையாக நடக்க வாகனங்களும், சுமை துாக்கும் ஊழியர்களும் போதிய அளவில் இருக்க வேண்டும். ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். விற்பனை முனைய கருவிகள், நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 1,000 கார்டுகள் வரை உள்ள கடைகளில் இரு ஊழியர்களும், 1,000க்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள கடைகளில் மூன்று ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலரை நியமித்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை எவ்வித புகாரும் இன்றி வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத்தொகையும் வழங்கப்படுவது உறுதி ஆகியுள்ளது. எவ்வளவு ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், 1000 அல்லது 2000 வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!