தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்… எடப்பாடி அதிரடி !!

Published : Jan 08, 2019, 07:16 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்… எடப்பாடி அதிரடி !!

சுருக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசு சற்று நேரத்துக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்து  ஸ்வீட் ஷாக் கொடுத்தது. அதாவது வரும் 14 ஆம் தேதி  ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அறிவித்ததால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணித்துளிகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி  மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊழியத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 3000 ரூபாய் பொங்கல் போனசாக வழங்கப்பட உள்ளது. உள்ளாட்சி மன்றம் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு  1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!