புதுச்சேரியில் அடுத்த அதிரடி... ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 20, 2021, 5:15 PM IST
Highlights

இதனிடையே புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பணியாற்றிய அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. அவருக்கு எதிராகவும், அவரை புதுச்சேரியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என முதல்வர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கிரண்பேடிக்கு பதிலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் பதவியேற்ற முதல் நாளே கடந்த 18ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்தடுத்து 4 எம்.எல்.ஏ.க்கள்  ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் கட்சியை வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் பெருன்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பணியாற்றிய அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கிரண்பேடியின் பதவிக்காலத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி, மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்தப் பொறுப்புகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைநிலை ஆளுநரின் அலுவலக சிறப்பு அதிகாரியாக பதவி நீட்டிப்பில் இருந்த தேவநிதிதாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மலர்வண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

click me!