தாமரையை மலரவைக்க மாநாட்டை தலைநகரில் நடத்தலாமா? பொன்னாருடன் டீப் டிஸ்கஷனில் அமித்ஷா...

 
Published : May 01, 2018, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
தாமரையை மலரவைக்க  மாநாட்டை தலைநகரில் நடத்தலாமா?  பொன்னாருடன் டீப் டிஸ்கஷனில் அமித்ஷா...

சுருக்கம்

pon radhakrishnan team bjp meeting plan

கர்நாடக தேர்தல் முடிந்ததும் தமிழக அரசியலை கையிலெடுக்கிறது பாஜக தலைமை.  வட  இந்தியாவில் இந்துக்களின் வாக்குகளை பாஜகவின் ஆதரவு வாக்குகளாக மாற்ற பெரும்பான்மை சமூகங்களுக்கான அரசியலை முன்னிருத்தி வியூகங்களை வகுத்து செயல்பட்டது போல் தமிழகத்தையும் அந்த வியூகத்தை செயல்படுத்த அமீத்ஷா முடிவு செய்திருக்கிறார்.

முதல்கட்டமாக , வட தமிழகத்தில் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தை தங்கள் பக்கம் இழுக்க, வன்னியர்களுக்கு ஆதரவான மாநாடு ஒன்றை நடத்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் உத்தரவிட்டுள்ளாராம் அமீத்ஷா.

அவரும் பாஜகவில் சமீபகாலத்தில் இணைந்த வன்னியர் தலைவர்களை அழைத்து ஆலோசித்திருக்கிறார். இதனையடுத்து,  வன்னியர்களை மையப்படுத்தி ஒரு மாநாடு நடத்துவதற்கான செயல்திட்டம் உருவாகியிருக்கிறது. இந்த மாநாட்டை சென்னையில் நடத்தலாமா? அல்லது திருவள்ளூரில் நடத்தலாமா? என யோசித்து வருகிறது பாஜக தமிழகத் தலைமை.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!