முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விடிய, விடிய போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிய போட்டோ ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விடிய, விடிய போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிய போட்டோ ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்திருக்கிறது. நெல்லை வள்ளியூர் அருகில் உள்ள ஆவரைகுளம் என்ற பகுதியில் பிரச்சாரம் நடைபெற்ற போது பாஜக உறுப்பினர் பாஸ்கர் என்பவர் அங்கிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென பிரச்னை ஏற்பட மர்ம நபர்கள் பாஸ்கரை அடித்து உதைத்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த கோரிக்கையை முன் வைத்து அவர் நெல்லை பாரதியார் சந்திப்பு முன்பு ஆர்பாட்டத்தில் இறங்கினார். இரவு முழுவதும் அங்கேயே இருந்த அவர், பின்னர் காவல்நிலையத்திலேயே படுத்து தூங்கி இருக்கிறார்.
விடிந்த பின்னரே அங்கிருந்து பொன் ராதாகிருஷ்ணன் கிளம்பி போயிருக்கிறார். அவர் காவல்நிலையத்தில் படுத்து உறங்கும் போட்டோ எப்படியோ லீக்காக, அந்த போட்டோ சமூக வலைதளங்களில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.