பொய் சொல்லுகிறார் பொன்னார் ….  பாஜகவுக்கு எதிராக  களமிறங்கிய ஓபிஎஸ் !!

Asianet News Tamil  
Published : Feb 15, 2018, 11:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பொய் சொல்லுகிறார் பொன்னார் ….  பாஜகவுக்கு எதிராக  களமிறங்கிய ஓபிஎஸ் !!

சுருக்கம்

Pon. Radha krishnan liar. told O.paneer selvam

தமிழகம் அமைதிப் பூங்காவாகயே திகழ்கிறது என்றும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின  பொய் என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இல்லை என்றும் ரௌடிகள் ராஜ்யமாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளார்களிடம்  பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழகத்தில்  சட்டம ஒழுங்கு மிக சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகம் அமைதிப்பூங்காவா திகழ்வதாகவும், இது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் கூறினார் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று கூறி மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் தமிழகத்துக்குரிய பங்கை மத்திய அரசு உடனடியதக விடுவிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சோ இது வரை வாய்மூடி எதுவுமே பேசாமல் இருந்து வந்தனர். தற்போது ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிக பேசத் தொடங்கியுருப்பத அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!