பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தம்..!

By vinoth kumar  |  First Published Jan 10, 2021, 12:14 PM IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்ற திமுக எம்.பி. கனிமொழி கோவையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்ற திமுக எம்.பி. கனிமொழி கோவையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்படைய ஆளுகட்சியை சேர்ந்த முக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, திமுக மகளிர் அணி சார்பில், அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கோவை விமான நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, கனிமொழி காலை ஈச்சனாரி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் தடையை மீறி, பொள்ளாச்சி சென்று போராட்டத்தில் கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

click me!