ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணமா? திருப்பரங்குன்றத்தை திக்குமுக்காட வைக்க செம்ம ப்ளான்...

By sathish kFirst Published Oct 7, 2018, 6:10 PM IST
Highlights

மழையைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அ.திமு.க.வும், தினகரனும் ரெட் அலர்ட்டில் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வோ வழக்கம் போல படுமந்தமாக இருக்கிறது என்று திருப்பரங்குன்ற தி.மு.க. நிர்வாகிகள் புலம்பிவருகிறார்கள்.

மழையைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அ.திமு.க.வும், தினகரனும் ரெட் அலர்ட்டில் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வோ வழக்கம் போல படுமந்தமாக இருக்கிறது என்று திருப்பரங்குன்ற தி.மு.க. நிர்வாகிகள் புலம்பிவருகிறார்கள்.

’’நாங்க திமுகவுல இருந்தாலும் அதிமுகவுல என்ன மூவ் நடக்குதுனு எங்களுக்குத் தெரிஞ்சிடும். அந்த வகையில இந்த இடைத் தேர்தலுக்கு ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க அதிமுகவுல முடிவு பண்ணியிருக்காங்க. தினகரனை சொல்லவேண்டியதே இல்லை. அவங்களை விட அதிரடியா எதாவது பண்ணுவார். அதுக்கான பட்டுவாடாவும் திருப்பரங்குன்றத்தை நெருங்கிடிச்சு. தேர்தல் தேதி அறிவிச்சா உடனே டெலிவரி பண்ணிடுவாங்க.  மனரீதியா திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக இருந்தாலும் பல தொண்டர்கள் பணரீதியா பரிதாபமான நிலையில கைசெலவுக்கே கஷ்டப்படுறாங்க. அதனால திமுகவுல இப்ப பணப்புழக்கம் இல்ல.

அதிமுக போல நாம ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாயெல்லாம் கொடுக்க வேணாம். ஆனா, நாம ஏதாவது பணம் கொடுத்தே ஆகணும். இல்லேன்னா மக்கள் திமுகவை கண்டுக்குற மாதிரி இல்ல. அதிமுக பத்தாயிரம் கொடுத்து திமுக ஐயாயிரம் கொடுத்தா கூட திமுகவுக்கு ஓட்டுப் போடுவாங்க. ஆனா, திமுக எதுவுமே கொடுக்கலைன்னா... அவங்க சாய்ஸ் எடப்பாடியா, தினகரனான்னுதான் போகும். இதுதான் நிலைமை. இதை தலைவர்கிட்ட சொல்லிடுங்க” என்ற திருப்பரங்குன்றம் திமுக நிர்வாகிகள், இன்னொரு முக்கியமான கோரிக்கையையும் திமுக தலைமைக்கு வைத்திருக்கிறார்கள்.

இடைத் தேர்தல்னாலே தமிழ்நாடு முழுவதுலேர்ந்தும் தொகுதிக்குள்ள வந்து குவிஞ்சுடறாங்க. இங்க உள்ளே ஒவ்வொரு தெருவையும் ஒவ்வொரு மாவட்டத்துக்காரங்களோட பொறுப்புல விட்டுடறீங்க. தேர்தல் செலவையும் வெளியூர்க்காரங்ககிட்டையே கொடுத்துடறீங்க.

வெளிமாவட்டத்துலேர்ந்து வர்றவங்க வரும்போதே அம்பது நூறு பேரைக் கூட்டிக்கிட்டுதான் வர்றாங்க. ரூம் போடறாங்க, தங்குறாங்க. அவங்களுக்குச் செலவு பண்ணிக்கிறாங்க. அதை என்னமோ தொகுதிக்கு செலவு பண்ற மாதிரி சொல்லிட்டு பிரச்சாரம் முடிஞ்ச உடனே  துண்டை உதறித் தோளுல போட்டுட்டுப் போயிடறாங்க. ஆனா, உள்ளூர்க்காரனுக்கு பணமும் இல்லை, பணத்தைக் கையாள அதிகாரமும் இல்லை. தேர்தல் செலவுக்கான பணத்தை உள்ளூர் நிர்வாகிகள்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க. வெளியூர்காரவுங்க எத்தனை பேரை வேணும்னாலும் போட்டு கண்காணிச்சுக்கங்க.

ஆனா லோக்கல் நிர்வாகிகளை கண்டுக்கிடாமல் வெளியூர் கட்சிக்காரங்ககிட்டையே எல்லா பொறுப்பையும் கொடுத்தா ஆட்டம் பாட்டம் கூட்டமா இருக்குமே தவிர, காரியம் நடக்காது. இதை தலைமைகிட்ட சொல்லுங்க” என்று பொங்கித் தீர்த்திருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள்.

திருப்பரங்குன்றத்து தி.மு.க.வின் அழுகுரல் ஸ்டாலின் காதுக்குக் கேட்குமா? நிர்வாகிகள் கேட்டுக்கொண்டபடி 20 ரூபாய் டோக்கனுக்குப் பதில் 10 ரூபாய் டோக்கன் வழங்கவாவது ஸ்டாலின் முன்வருவாரா?

click me!