ஆமாம்... தமிழிசைனா யாரு? நான் பார்த்ததே இல்லை... பகீர் கிளப்பிய தினகரன்!

By vinoth kumarFirst Published Oct 7, 2018, 5:16 PM IST
Highlights

நான் தமிழிசையை நேரில் பார்த்தது கூட இல்லை, அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நான் தமிழிசையை நேரில் பார்த்தது கூட இல்லை, அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னை ரகசியமாக சந்தித்ததாகவும், கடந்த வாரம் மீண்டும் சந்திக்க தூதுவிட்டதாகவும் கூறி தினகரன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இது ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தமா? அல்லது தர்ம சங்கடமான யுத்தமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு போர். அதில் நான் கருத்து சொல்வ விரும்பவில்லை என்றார். அதேவேளையில் பல நாட்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்க தூது அனுப்பினார்கள் என்று கூறினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதுபற்றி டி.டி.வி. தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அரசியலுக்காக லாபத்திற்காக எதையும் பேசுபவன் நான் அல்ல. உண்மை என்றால் உண்மை என்று சொல்லிவிடப் போகிறேன். இதில் என்ன இருக்கு என்றார். தினகரன் அணியினர் தூதுவிட்டார்கள் என்றால் யார் தூது போனார் என்பதை சொல்ல வேண்டியது தானே என தினகரன் கூறினார். 

மேலும் நான் தமிழிசையை நேரில் கூட பார்த்தது இல்லை. டி.வி.யில் தான் பார்த்து இருக்கிறேன். 1999-ல் நான் எம்.பி.யாக இருந்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தார். மேலும் சி.பி. ராதாகிருஷ்ணனையும் தெரியும். இப்போதுள்ள தலைவர்கள் யாரையும் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

click me!