"கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வைரவிழா" - தலைவர்கள் வாழ்த்து

First Published Jun 3, 2017, 11:28 AM IST
Highlights
political leaders wishing karunanidhi on his birthday


பிறந்தநாள் மற்றும் வைர விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரி உள்ளிட்ட ஏனைய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா இன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த தருணத்தில் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கருணாநிதிக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை அளிக்க இறைவனிடம்  வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 94வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த சமயத்தில் தனது மனமார்ந்த பாராட்டுகளை  கருணாநிதி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பல ஆண்டு காலம் சேவை செய்வதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த கருணாநிதிக்கு நல்ல உடல்வலம் கிடைக்க தான் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழாவுக்கும், சட்டசபையின் 60வது ஆண்டு வைர விழாவிலும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் கூறுகையில், 94வது பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் நீடுழி வாழ இறைவனை பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., செல்வி, மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள கவர்னர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன்,மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌ஷணன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர ஜி.கே.வாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தனர்.

மேலும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருணாநிதிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். 

click me!