நாங்கள்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளுங்களே கிடையாது...ஜெயில்ல இருக்க வேண்டியவங்க...திகைக்க வைத்த தலைவர்

By Vishnu PriyaFirst Published Dec 5, 2019, 6:34 PM IST
Highlights

நாங்கள் எப்போதும் மேலேயும் போகமாட்டோம், கீழேயும் போக மாட்டோம். நாங்கள் போகக்கூடிய ஒரே இடம் சிறைதான். அதைத்தவிர வேறு எதுவும் கிடையாது. லஞ்சம், ஊழலுக்காக நாங்கள் சிறைக்கு போக மாட்டோம். உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சிறைக்குப் போக கூடியவர்கள் - கி.வீரமணி

*  குட்கா வழக்கில் ஆஜராகும்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதில் ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் சொந்த வேலை காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை! என்று கூறி, அமலாக்க துறையினரின் கேள்விக்கு, கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது - பத்திரிக்கை செய்தி

* தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தனித் தீவு ஒன்றை வாங்கி, அதை ‘கைலாசம்’ எனும் தனி நாடாக அறிவித்துள்ளார் நித்தியானந்தா. அந்த நாடு பற்றி ‘இது ஒரு எல்லையற்ற நாடு. உலகின் அனைத்து இந்துக்களுக்காகவே ‘கைலாசம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் குடுமக்களாக விரும்புபவர்களை வரவேற்கிறேன். இந்த நாட்டுக்கு தனி பாஸ்போர்ட் வசதி உள்ளது. குருகுல கல்வி வசதி, இலவச மருத்துவ சிகிச்சை, உணவு சலுகைகள் கிடைக்கும். ’ என்று கூறியுள்ளார் - பத்திரிக்கை செய்தி

*  சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்! என்று சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு, கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். பொன் மாணிக்கவேல் அவற்றை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் - பத்திரிக்கை செய்தி

* திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்ததில் என் பங்காக 5.7 கிலோ தங்கம் கிடைத்தது. அதை எடுத்து சென்ற போதுதான் திருவாரூரில் வாகன சோதனையில் சிக்கினேன். போலீஸிடமிருந்து தப்பிக்க, நகைகளை கீழே போட்டுவிட்டு ஓடினேன். அவற்றை எடுத்த திருவாரூர் போலீஸார் அதில், ஒரு  கிலோ தங்க நகைகளை அமுக்கிவிட்டனர் -  குற்றவாளி சுரேஷ்

* உத்தரப்பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு உள்ளது. இதனால்தான் வழக்கு பதிய தாமதம், கைது செய்ய தாமதம் என்றாக்கி, இப்போது விசாரணையும் இழுத்தடிக்கப்படுகிறது - பிரியங்கா காந்தி

*  மேட்டுப்பாளையத்தில், பிரம்மாண்ட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலையை தமிழக முதல்வர் வழங்க வேண்டும் - விஜய்காந்த்

*  தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார். ‘அரசின் அலட்சியத்தால்தான் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தனர்.’ என்கிறார். அரசுக்கும், அந்த உயிர் பலிகளுக்கும் என்ன சம்பந்தம்?
- எடப்பாடி பழனிசாமி

*  நாங்கள் எப்போதும் மேலேயும் போகமாட்டோம், கீழேயும் போக மாட்டோம். நாங்கள் போகக்கூடிய ஒரே இடம் சிறைதான். அதைத்தவிர வேறு எதுவும் கிடையாது. லஞ்சம், ஊழலுக்காக நாங்கள் சிறைக்கு போக மாட்டோம். உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சிறைக்குப் போக கூடியவர்கள் - கி.வீரமணி

*  சினிமாவில் சரியாக தமிழ் பேசி நடித்துவிடுவேன். ஆனால் தமிழ்நாட்டில் மேடையில் தமிழில் பேச நடுக்கமாக உள்ளது. தவறாக பேசிவிடுவேனோ என்று பயமாக உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபார் என்ற மொழிதான் இருந்தது - மம்மூட்டி
 

click me!