காவல்துறையா..? ரவுடிகளின் கூடாரமா..? முதல்வர் மீது கனிமொழி காட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 21, 2020, 12:38 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? இல்லையா? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? இல்லையா? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த 32 வயது செல்வன் என்பவர் சொத்து பிரச்னையில் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார் மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

 

இதனால், ஹரிகிருஷ்ணன் மீதும் கொலை செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள அவர் இன்னும் கைது செய்யப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘’தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. 

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? இல்லையா ? என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!