ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸ் செலக்சன்.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அதிரடி, விவரம் உள்ளே.

Published : Jul 23, 2021, 12:39 PM ISTUpdated : Jul 23, 2021, 12:46 PM IST
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸ் செலக்சன்.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அதிரடி, விவரம் உள்ளே.

சுருக்கம்

விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் 26.07.2021 திங்கட்கிழமை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் (காலை 6 மணி அல்லது 9 மணி) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் அழைப்புக்கடிதத்துடன் ஆஜராக வேண்டும். 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத் தேர்வு - 2020 -க்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித்தேர்வு 26.07.2021 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் 26.07.2021 திங்கட்கிழமை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் (காலை 6 மணி அல்லது 9 மணி) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் அழைப்புக்கடிதத்துடன் ஆஜராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் செல்போன்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை தேர்வு நடைபெறும் இடத்தின் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

Covid-19 Negative ரிப்போர்ட் உடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் இடத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும். தேர்வர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆஜராக வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!