குறை இருந்தால் மட்டும் சொல்லுங்க.. குழப்பம் உண்டாக்குற வேலை எல்லாம் வேண்டாம்.. அமைச்சர் சேகர் பாபு..!

By vinoth kumarFirst Published Jul 23, 2021, 11:53 AM IST
Highlights

அறநிலையத் துறை கோவில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத் துறை கோவில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை வசம் இருக்கும் அதனை மாற்ற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை அறக்கட்டளை அமைத்து நிர்வாகம் செய்வது போல் இந்துக்கள் உள்பட மற்ற அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் அறக்கட்டளை மூலம் நிர்வாகிகள் நிர்வாகம் செய்ய உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அறநிலைத்துறைகளை கலைக்க பாஜக தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு;- அறநிலையத்துறை கோயில்கள், தனியார் சொத்துக்கள் அல்ல.  அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.

click me!