
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் ரொக்கம் சிக்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிக அளவு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் 20 குழுக்களாக பிரிந்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உரிய இடங்களில் ரெய்டு நடத்தினர். இது அதிமுகவினரை மிரட்டும் செயல். திமுகவின் சதிக்கு அஞ்சமாட்டோம் என ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்து இருந்தனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் ரொக்கம் சிக்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.