Breakingnews: பயங்கரவாதிகளுக்கு பதிலாக எங்களை ஒட்டுக்கேட்பதா..? அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்!

Published : Jul 23, 2021, 11:23 AM IST
Breakingnews: பயங்கரவாதிகளுக்கு பதிலாக எங்களை ஒட்டுக்கேட்பதா..? அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்!

சுருக்கம்

பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமாகவே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வகைப்படுத்தியுள்ளது. 

பெகாசஸ் விவகாரத்துக்கு பொறுப்பு ஏற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ‘’எனது செல்போனும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரத்துக்கு பொறுப்பு ஏற்று அமித் ஷா பதவி விலக வேண்டும். அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் அனைவரையும் விலைக்கு வாங்க முடியாது. ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது.  பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒட்டுகேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று  உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமாகவே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வகைப்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் நமது அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்’’என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!