செல்போன் ஒட்டுக்கேட்பு... நாடாளுமன்றத்தை கலங்கடிக்கும் திமுக- காங்கிரஸ் எம்.பி.,க்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jul 23, 2021, 10:59 AM IST
Highlights

எதிர்க்கட்சி எம்.பி.க்களான திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, செந்தில்குமார் உள்ளிட்டவர்களும், காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் இந்த தர்ணாவில் பங்கேற்று வருகின்றனர்.

செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களான திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, செந்தில்குமார் உள்ளிட்டவர்களும், காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் இந்த தர்ணாவில் பங்கேற்று வருகின்றனர். சிவசேனா எம்.பி.,க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் புதிதாக வெளியாகியிருக்கும் செய்தியில், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராஜேஷ் அஸ்தானா ஆகியோரது செல்போன்கள் ஓட்டு கேட்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

click me!