Inspector Saravanan லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் காவல் ஆய்வாளர்... ஸ்டேசனில் செய்த காரியம் என்ன..?

By Thiraviaraj RMFirst Published Dec 8, 2021, 11:03 AM IST
Highlights

வித்தியாசமான முயற்சியை, செயல் முறையை பலரும் பாராட்டுகின்றனர். இவர் மூலமாக காவல்துறை மீதே மக்களுக்கு சிறிய நம்பிக்கை பிறந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் கையூட்டு என்பது சர்வசாதாரணமாகி விட்டது. எங்கும் லஞ்சம் லாவண்யம் கொடிகட்டிப்பறக்கிறது. இன்னும் சொல்லப்போனால் போலீசாரின் பெயர் இந்த விவகாரத்தில் பலமாகவே அடிபடும். மாமூல் வேட்டைவேறு தனிரகம். வாகன சோதனை என்கிற பெயரில் போலீசார் நடத்தும் வேட்டை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

ஆனால், இவற்றையெல்லாம் கடந்து ஆயிரத்தில் ஒருவனாக ஜொலிக்கிறார் இன்ஸ்பெக்டர் சரவணன். அவரது வித்தியாசமான முயற்சியை, செயல் முறையை பலரும் பாராட்டுகின்றனர். இவர் மூலமாக காவல்துறை மீதே மக்களுக்கு சிறிய நம்பிக்கை பிறந்துள்ளது. 

அப்படி என்ன செய்தார் இன்ஸ்பெக்டர் சரவணன்..? 

’’மதுரை யா.ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு காவல்துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம்( கையூட்டு) பெறுவதில்லை. என் பெயரைச் சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்து தருவதாக கூறி யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கையூட்டு கொடுக்க வேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எந்தவித பொறுப்பில்லை எனத் தெரிவித்துல்க் கொள்கிறேன் இப்படிக்கு சரவணன்’’ என காவல் நிலையத்தில் அவர் மாட்டியுள்ள பலகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

click me!